Type Here to Get Search Results !

இயல் 5 8ம் வகுப்பு குழலினிது யாழினிது eyal-5-8th tamil-kulalinithu-yalnithu

 

இயல் 5
8ம் வகுப்பு
குழலினிது யாழினிது

table of contents(toc)

திருக்கேதாரம்

  • பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
    கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
    மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
    கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே. - சுந்தரர்

சொல்லும் பொருளும்

  • பண்         – இசை
  • கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள்– மதயானைகள் 
  • முரலும்     – முழங்கும்
  • ·பழவெய்     –முதிர்ந்த மூங்கில்

சுந்தரர்

  • தேவாரம் பாடிய மூவரில் ஒருவர்.
  • நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்.
  • பன்னிரு திருமுறைகளில் இவருடையது ஏழாம் திருமுறையாகும்.
  • திருத்தொண்டர் தொகை என்ற நூலை இயற்றியுள்ளார். இதனை மூலநூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் இயற்றினார்.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம்.
  • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
  • கேதாரபதிகப் பாடல் சுந்தரர் பாடியது. 
  • தே+ ஆரம் =இறைவனுக்கு சூடும் மாலை, தே+ வாரம் இனிய இசை பொருந்திய பாடல்.
  • பதிகம் - பத்து பாடல்கள் கொண்டது.

பாடறிந்து ஒழுகுதல்

  •  ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
    போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை  - கலித்தொகை

சொல்லும் பொருளும்

  • அலந்தவர்                 - வறியவர் 
  • கிளை                         உறவினர்
  • செறாஅமை              - வெறுக்காமை 
  • பேதையார்                -அறிவற்றவர்
  • நோன்றல்     பொறுத்தல் 
  • மறாஅமை    - மறவாமை
  • போற்றார்       பகைவர் 
  • பொறை         -பொறுமை

பொதுவான குறிப்புகள்

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.
  • இது கலிப்பா என்னும் பாவகையால் ஆனது.
  • 150 பாடல்கள் கொண்டது.
  • குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, நெய்தற் கலி, மருதக்கலிபாலைக்கலி-  என ஐந்து பிரிவுகளை உடையது 
  • இதைத் தொகுத்தவர் நல்லந்துவனார்  
  • நெய்தற்கலி பாடியதும் இவரே.

 

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

  • உலகின் பழமையான கலைகளுள் ஒன்று மண்பாண்ட கலை.
  • நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண் கலங்கள் அகழ்வாய்வில் கிடைத்தன.
  • பானை செய்யும் சக்கரம் - திருவை
  • பானை செய்தல் = பானை வனைதல் என்று சொல்வது மரபு
  • சுடுமண் சிற்பக்கலை. -  டெரகோட்டா
  • கல்மூங்கில், மலை மூங்கில், கூட்டு மூங்கில் என மூன்று வகை உண்டு. கூட்டு மூங்கில் கைவினைப் பொருள்களுக்கு ஏற்றது.
  • புறநானூறு - கூம்பொடு மீப்பாய் களையாது.
  • தமிழ்நாட்டின் மாநில மரம் பனை
  • பிரம்பு =கொடிவகை தாவரம். இதன் தாவரவியல் பெயர் கலாமஸ் ரொடாங் (Calamus Rotang). இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும் , மண்குகைகளிலும் செழித்து வளரும். 
  • தமிழகத்தில் குறைவாகக் கிடைக்கும்.அசாம், அந்தமான் மற்றும் மலேசியாவிலிருந்து தருவிக்கப்படுகிறது.

 

தமிழர் இசைக்கருவிகள்

  • ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது அகராதி.
  • ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது கலைக்களஞ்சியம் ஆகும்.
  • இசை-2 வகை-குரல்வழி இசை, கருவிவழி இசை 
  • இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் எனப்பட்டனர்.
    • நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
      பாணன் சூடான் பாடினி அணியாள்  - புறநானூறு.

இசைக்கருவிகளின் வகைகள்

  • 4 வகை இசைகருவி =தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி 
  • விலங்குகளின் தோலால் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள்.  (எ.கா.) முழவு, முரசு
  • நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும்.   (எ.கா.) யாழ், வீணை
  • காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும்.  (எ.கா.) குழல், சங்கு
  • ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும்.  (எ.கா.) சாலரா, சேகண்டி.

உடுக்கை

  • வகை - தோல்கருவி
  • உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு கைப்பறை ஆகும். 
  • பெரிய உடுக்கை = தவண்டை
  • சிறு உடுக்கை = குடுகுடுப்பை
  • தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்- சம்பந்தர் தேவாரம்

குடமுழா

  • ஐந்து முகங்களை உடைய முரசு வகை
  • இதனைப் பஞ்சமகா சப்தம் என்றும் அழைப்பர். 
  • வகை - தோல்கருவி
  • சென்னை அருங்காட்சியகத்திலுள்ளது 

புல்லாங்குழல்

  • வகை =காற்று கருவி
  • இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என அழைப்பர்.
  • எழு சுரம்= ஏழு துளைகளை உடையது
  • இது மூங்கில் தவிர சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. 
  • கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. 
    • குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
      மழலைச்சொல் கேளா தவர். - திருக்குறள்

கொம்பு

  • வகை - காற்றுக்கருவி
  • தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்பையும்.இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. 
  • ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இசைக்கப்படுகின்றன

சங்கு

  • வகை - காற்றுக்கருவி
  • இஃது ஓர் இயற்கைக் கருவி
  • சங்கின் ஒலியைச் சங்கநாதம். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 
    • சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
      பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் - திருப்பாவை 

சாலரா

  • இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கும்.
  • வகை - கஞ்சக்கருவி
  • இக்காலத்தில் 'ஜால்ரா' என்பர். இதனைப் பாண்டில் எனவும் அழைப்பர். 

சேகண்டி

  • வட்டவடிவமான மணி வகை
  • சேமங்கலம் என்றும் அழைப்பர். 
  • வகை - கஞ்சக்கருவி
  • திமிலை
  • பலா மரத்திலான தோல் கருவி திமிலை
  • மணற்கடிகார வடிவம் கொண்டது. 
  • இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.
    • சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
           வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி - பெரியபுராணம்
  • வகை - தோல்கருவி

பறை

  • வகை – தோல்கருவி. இது தப்பு என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. 
  • இதனைக் கொண்டு ஆடும் ஆட்டம் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • பழங்காலத்தில் செய்திகளைத் அறிவிக்கக் கோட்பறையை பயன்படுத்தினர். 
  • பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது ஆகோட்பறை பயன்படுத்தினர்.

மத்தளம்

  • வகை - தோல்கருவி
  • மத்து = ஓசை பெயர். இசைக்கருவிகளுக்கு எல்லாம்  தளம் அடிப்படை ஆகும். 
  • மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் அடியார்க்கு நல்லார்
  • இரண்டு கைகளாலும் இசைக்கப்படுவதால் முதற்கருவி என்பர்.
  • தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவர் என்பர். 
    • மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
      முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ் - நாச்சியார் திருமொழி

முரசு 

  • தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது முரசு ஆகும்.
  • படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள் பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்தன. 
  • 36 வகையான முரசுகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 
  • மாக்கண் முரசம் என்று மதுரைக் காஞ்சி

முழவு

  • ஒரே முகத்தையுடைய முரசு வகை
  • மண்ணமை முழவு எனப் பொருநராற்றுபடை
  • காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியன பயன்படுத்தப்பட்டன
  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்  - புறநானூறு

யாழ்

  • வகை - நரம்புக் கருவி
  • பேரியாழ், செங்கோட்டியாழ் போன்றவை மிகப் பழமையானவை. 
  • 21 நரம்புகள்=பேரியாழ்,
  • 19 நரம்புகள் =மீன் வடிவில் அமைந்தது மகரயாழ்
  • 14 நரம்புகள் =சகோடயாழ்
  • யாழின் வடிவமே மாற்றமடைந்து வீணையாக உருமாறியது என்பர்.

வீணை

  • வகை - நரம்புக் கருவி
  • ஏழு நரம்புகளைக் கொண்டது. 
  • பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்தது.

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

தொகைநிலை தொடர்கள்

  • இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருவது தொகைநிலைத் தொடர். ஆறுவகைப்படும்.

  1. வேற்றுமைத் தொகை 
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை 
  4. உவமைத்தொகை 
  5. உம்மைத்தொகை 
  6. அன்மொழித்தொகை

வேற்றுமைத்தொகை

  • இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர். 

  1. திருவாசகம் படித்தான் - (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
  2. தலைவணங்கு - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை
  3. சிதம்பரம் சென்றான் - (கு) நான்காம் வேற்றுமைத்தொகை
  4. மலைவீழ் அருவி - (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
  5. கம்பர் பாடல் - (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை
  6. மலைக்குகை - (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

  • ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
  • இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (எ.கா.) பால் குடம் - (பாலைக் கொண்ட குடம்)
  • மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (எ.கா.) பொற்சிலை - (பொன்னால் ஆகிய சிலை)
  • நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (எ.கா.) மாட்டுக் கொட்டகை – (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை) 

வினைத்தொகை

  • காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருவது.
  • காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.
  • ஆடுகொடி = ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி  என்று பொருள்படும்.
  • காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – ( நன்னூல் 364)

பண்புத்தொகை

  • பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்
    • எ.கா- வெண்ணிலவு = வெண்மையான நிலவு

இருபெயரொட்டு  பண்புத்தொகை 

  • சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புதொகை என்பர்
    • எ.கா- பனைமரம் 

உவமைத்தொகை

  • உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமை தொகை எனப்படும். 
    • எ.கா: மலர்விழி = மலர் போன்ற விழி

உம்மைத் தொகை

  • சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச் சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத் தொகை என்பர்
    • எ.கா இரவுபகல்.

எண்ணும்மை

  • ஒன்றுக்கும் மேற்பட்ட  சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்படையாக வருது எண்ணும்மை எனப்படும்.  
    • (எ.கா.) இரவும் பகலும்

அன்மொழித்தொகை 

  • பொற்றொடி வந்தாள் (தொடி-வளையல்)
  • பொற்றொடி =பொன்னாலான  வளையல் எனப் பொருள்.
  • வந்தாள் என்னும் வினைச் சொல் வருவதால் பொன்னாலான   வளையலை   அணிந்த  பெண்  வந்தாள்  எனப்பொருள். 'ஆல்' எனும் மூன்றாம் வேற்றுமை உருபும் 'ஆகியபயனும் மறைந்து வருவதால்= மூன்றாம் வேற்றுமைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை.
  • வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொடர்களுள், அவை அல்லதா   வேறுபிற சொற்களும் மறைந்து வருதுது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும். 

தொகாநிலைத் தொடர்

  • ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் தொகாநிலைத் தொடர் என்பர். இது ஒன்பது வகைப்படும்

1.         எழுவாய்த் தொடர் 

2.         விளித்தொடர் 

3.        வினைமுற்றுத் தொடர் 

4.        பெயரெச்சத் தொடர் 

5.        வினையெச்சத் தொடர் 

6.        வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

7.         இடைச்சொல் தொடர் 

8.        உரிச்சொல் தொடர் 

9.        அடுக்குத்தொடர் -


எழுவாய்த் தொடர்

  • எ.கா மல்லிகை மலர்ந்தது.மல்லிகை’-எழுவாயைத் தொடர்ந்துமலர்ந்ததுபயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வரும்.

விளித்தொடர்

  • எ.கா. நண்பா படி. –நண்பாவிளிப்பெயர்படி’-பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வரும் 

வினைமுற்றுத் தொடர்

  • எ.கா. சென்றனர் வீரர். –சென்றனர்’-வினைமுற்றுவீரர்’ -பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வரும்.

பெயரெச்சத் தொடர்

  • எ.கா. வரைந்த ஓவியம். – இதில்வரைந்தஎன்னும் எச்சவினைஓவியம்என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வரும்

வினையெச்சத் தொடர்

  • ·      எ.கா. தேடிப் பார்த்தான். –தேடிஎன்னும் வினையெச்சச் சொல்பார்த்தான்என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வரும்

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

  • எ.கா. கவிதையை எழுதினார். – இதில்என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்தும் 

இடைச்சொல் தொடர்

  • எ.கா. மற்றுப் பிற (மற்று + பிற) – இதில்மற்றுஎன்னும் இடைச்சொல் வெளிப்படையாக வரும்

உரிச்சொல் தொடர்

  • எ.கா. சாலவும் நன்று. – இதில்சாலஎன்னும் உரிச்சொல் வெளிப்படையாக  வரும்

அடுக்குத்தொடர்

  • எ.கா. நன்று நன்று நன்று – இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வரும்

மற்ற குறிப்புகள்

  • முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தில் அமைந்த நிகழ்ச்சி (காணாமல் போன எருமை அவர்களை  தேடி வரக் குழல் இசைத்தனர் என கூறியுள்ளார்).

இணைச்சொற்கள்

  • தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். 
  • அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம். (எ.கா.) தாய் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள்.
  • இணைச்சொற்கள் மூன்று வகைப்படும்.1. நேரிணை,2. எதிரிணை,3. செறியிணை
    • ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும். (எ.கா.) சீரும் சிறப்பும், பேரும் புகழும்
    • எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும். (எ.கா.) இரவுபகல், உயர்வுதாழ்வு
    • பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும். (எ.கா.) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்

கலைச்சொல் அறிவோம்.

  • பின்னுதல்                – Knitting 
  • புல்லாங்குழல்          – Flute 
  • கொம்பு                      – Horn
  • முரசு                           – Drum 
  • கைவினைஞர்        Artisan 
  • கூடைமுடைதல்       Basketry 
  • சடங்கு                       - Rite.
  • கைவினைப் பொருள்கள் – Crafts

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.